2025 மே 02, வெள்ளிக்கிழமை

வல்வெட்டித்துறையில் 'இந்திர விழா'

Suganthini Ratnam   / 2012 மே 07 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ். வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு 'இந்திர விழா' என்னும் கலை நிகழ்வு நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான 'இந்திர விழா' இன்று திங்கட்கிழமை அதிகாலைவரை நடைபெற்றது.  ஆலயத்திலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரம் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டதுடன்,  கலை நிகழ்வுகளுக்காக  ஏழு அரங்குகள் அமைக்கப்பட்டன.  விவாத அரங்கம், நாட்டியாஞ்சலி, இசை நிகழ்வு மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளும்  நடைபெற்றன.  'இந்திர விழா'வில் தென்னிந்தியக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X