2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்க்கான ஒன்றுகூடல்

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் குறும்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மூர்த்தி விருந்தினர் விடுதியில் அண்மையில் இடம்பெற்றது.

இவ் ஒன்றுகூடல் நிகழ்வினை  ஹிமலாயா கிரியேஷன் தனியார் விளம்பர, திரைப்பட நிறுவனம் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில எஎஎ மூவிஸ் இன்டர்நேஷனல் திரைப்பட நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் க.செவ்வேள், ஈழத்தின் புகழ்பெற்ற திரைப்பட இயக்நனர்; நா.கேசவராஜன் பிரதான நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) திருமதி கௌரி அனந்தன், தலைவர், தயாரிப்பாளர் ரெ.துவாரகன், இயக்குநர் ரெ.நிஷாகரன், எடிட்டர் சி.துஷிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தில் நல்லதொரு சினிமாத்துறை ஒன்றை உருவாக்குவதற்கென திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சங்கம் ஒன்று இதன்போது அமைக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராக இயக்குனர்நர் கேசவராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






  Comments - 0

  • roboraj Tuesday, 05 June 2012 05:09 AM

    அப்பாடா நம்ம சினிமா இனி உயிர் பெறும் போல கெடக்கு என்ன!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .