2025 ஜூலை 16, புதன்கிழமை

'மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள் மடம் என்னும் பேரூர்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஜூன் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜதுஷன்)


'மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள் மடம் என்னும் பேரூர்' நூல் வெளியீட்டுவிழா இன்று சனிக்கிழமை காலை குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், பிரதம அதிதியாக  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சொர்ணராஜ், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், வைத்திய திலகம் டாக்டர் வே.விவேகானந்தராசா ஆகியோரும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் எம்.செல்வராசா, மூத்த எழுத்தாளர் இரா.நாகலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் தேசகீர்த்தி கீர்த்தி ஸ்ரீ மாசிலாமணி திருநாவுக்கரசு நூல்களை பிரதம அதிதிகளுக்கு வழங்கி வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.

நூலாய்வுரையை முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சி.அமலநாதனும் நூல் நயவுரையை செங்கதிரோன் ஆகியோரும் நிகழ்த்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .