2025 மே 19, திங்கட்கிழமை

மண்முனைப்பற்று பிரதேசத்தில் நாட்டாரியல் விழா

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டாரியல் விழா நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து இந்த நாட்டாரியல் விழாவை நடாத்தியது.

ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நாட்டாரியல் விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டி.டபிள்யு. வெலிக்கல, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராசா, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி வே.கந்தசாமி, மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காவடி நடனம், செம்பு நடனம், களிகம்பு, காத்தவராயன் கூத்து போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X