2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் கூத்துவிழா

A.P.Mathan   / 2012 ஜூன் 28 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் கூத்துவிழா - கன்னன்குடா மற்றும் கல்லடி ஆகிய இடங்களில் எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் நிகழ்வாக கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் கூத்துவிழா ஆரம்பமாகிறது. இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையேற்று நடத்துகிறார். தொடக்கவுரையினை மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் நிகழ்த்துகிறார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், சிறப்பு அதிதியாக வவுணதீவு பிரதேச செயலாளர் வி.தவராஜா, கௌரவ அதிதிகளாக அண்ணாவியார்களான அரசரெத்தினம், பொன்னம்பலம் (பொன்னர்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முதல்நாள் நிகழ்வு நன்றியுரையினை கலாசார அபிவிருத்தி உதவியாளர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் வழங்குவார். இதன்போது நந்தியின் மகிமை, ஆடக சவுந்தரி, உலகநாச்சி ஆகிய 3 கூத்துகள் அரங்கேற்றப்படவுள்ளன.

கல்லடி பேச்சியம்மன் ஆலய முன்றலில் நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எம்.நவரூபரஞ்சினி தலைமையேற்று நடத்துகிறார். இதன் போது ஆடக சவுந்தரி, நந்திக்குப் புல் கொடுத்த கதை ஆகிய 2 கூத்துகள் அரங்கேற்றப்படவுள்ளன.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், சிறப்பு அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

அதே நேரம், கௌரவ அதிதிகளாக அண்ணாவியர்களான எம்.கணபதிப்பிள்ளை, சி.ஞானசேகரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X