2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கன்னன்குடாவில் கூத்துவிழா

Kogilavani   / 2012 ஜூலை 06 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் கூத்து அரங்கேற்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரால் நந்தியின் மகிமை, வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகத்தினரால் ஆடக சவுந்தரி, முனைக்காடு நாகசக்தி கலைக்கழகத்தினரால் உலகநாச்சி ஆகிய கூத்துகள் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், கவிஞர் தேனூரான், ஆரையூர் இளவல், தாழை செல்வநாயகம், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர், வவுணதீவு பிரதேச சபை எதிர்க கட்சித் தலைவர் கே.விமலநாதன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .