2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொழும்பில் ஜப்பான் கலாசார கண்காட்சி

Super User   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் கலாசார கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் தேசிய கலாபவனத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இங்கு பலவகை மலர் செண்டுகள், பொன்சாய் தாவரங்கள், கடதாசி மடிப்பு கலை மற்றும் தேநீர் வைபவம் என்பன செய்முறை விளக்கங்களுடன் நடத்தப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவராலயம் மற்றும் இலங்கை ஜப்பான் மொழி ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த கலாசார கண்காட்சியை செப்டம்பர் 1ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் செப்டம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .