2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாசிப்பு மாதத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா நகரசபையால் நடத்தப்பட்ட வாசிப்பு மாதத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.

நகரசபையின் செயலாளர் வீ.வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வாசிப்பு மாதத்தில் பரவலாக பாடசாலை மட்டத்திலான போட்டிகளில் வெற்றியீட்டிய வவுனியா மாவட்ட மாணவர்கள்  சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது 'கருவறையில் இருந்து கல்லறைவரை' என்னும் நகரசபையின் செயற்பாடுகள் தொடர்பான நாடகமும் மேடையேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் க.சிவலிங்கம், செட்டிகுளம் பிரதேசசபையின் தலைவர் அந்தோனி ஐயா, நகரசபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .