2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'சிவானந்தன்' மலர் வெளியீடும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(ஜிப்ரான்)


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பும் 'சிவானந்தன்' சிறப்பு மலர் வெளியீடும் கல்லூரி அக்கல்லூரி அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன், மட்டு. இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி காபலிஜானந்தா,  வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களும் ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .