2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கலாபூஷணம் அலி அக்பரின் கடைசி வேரின் ஈரம் நூல் வெளியீடு

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீட்


ஓய்வுபெற்ற அதிபரான கலாபூஷணம் எம். எம். அலி அக்பர் அவர்களின் கன்னி சிறுகதை நூல் வெளியீடான 'கடைசி வேரின் ஈரம்' என்ற சிறுகதை தொகுப்பு வெளியீடு நேற்று திங்கட்கிழமை மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கிண்ணியா நகர சபை தவிசாளர் ஹில்மி மஹ்ரூப் கிண்ணியா பிரதேச சபை உதவித் தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் கிண்ணியா விஷன் பணிப்பாளர் ஏ.ஆர்.சைபுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலாபூஷனம் கே.எம்.எம்.இக்பால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மூதூர், திருகோணமலை மற்றும் கிண்ணியாவில் இருந்து கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நூலாசிரியரின் படைப்புக்களில் பத்திரிகைகளில் இருந்து வெளியான 83 சிறு கதைகளில் இருந்து 12 சிறு கதைகள் இந்த  நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .