2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'இன்பமான நிகழ்வு' கலை நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, இலங்கை உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்தின் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் இன்பமான நிகழ்வு எனும் கலை நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியனும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு  கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டார்.

இதன்போது, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இதேவேளை, முதலாம் வருட மாணவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்திற்கு உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா கற்கைக்கு என சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அதில் 110 மாணவர்கள் புதிய வருடத்துக்கென இணைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X