2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'திறந்த தொகுப்பு' நடமாடும் நூலகக் கண்காட்சி

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


'திறந்த தொகுப்பு' நடமாடும் நூலக கண்காட்சியின் ஆரம்பிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

கிரவுண்ட் வியூஸ் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் கூட்டிணைப்புடன் ஆசிய கலைக்காப்பகம் மற்றும் ரேக்கிங் லிவ்ஸ் என்பன இணைந்து நடத்திய திறந்த தொகுப்பு நூலக அங்குரார்ப்பண கண்காட்சி சுன்னாகம் கிறிஸ்தவசேவ ஆச்சிரமத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சியில், கலை சம்பந்தப்பட்ட காட்சிக் கையேடுகள், பருவகால இதழ்கள் மற்றும் விபரணக் குறிப்புக்ள என 400 மேற்பட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், இராமநாதன் நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் இணைப்பாளர் தா.சனாதனன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் படைப்பாளிகள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .