2025 மே 09, வெள்ளிக்கிழமை

கொழும்பில் மூதூர் முறாசிலின் நூல் அறிமுக நிகழ்வு

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளரான மூதூர் முறாசில் எழுதிய 'முஸ்லிம்களும் சமகாலப் பிரச்சினைகளும்' சில பதிவுகள்: பாகம்- 1  எனும் நூலின் அறிமுக நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்த நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.35 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதித் தலைவர் கலைவாதி கலீல் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் 'இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த நூலின் அறிமுகத்தினை சர்வதேச பார்வை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரவூப் ஸெயின் மேற்கொள்ளவுள்ளதுடன் நூலின் முதற் பிரதியை நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X