
-மாணிக்கப்போடி சசிகுமார்
இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேழைவகள் மன்றம் என்பன இணைந்து நாடாத்தும் இளைஞர் விருது விழாவிற்கான போட்டியின் மட்டக்களப்பு மாவட்ட விருது விழாவிற்கான மாவட்ட மட்டப் போட்டிகள் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையினால் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இப் போட்டியின் போது பரதநாட்டியம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், மௌன நாடகம் எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.