2025 ஜூலை 05, சனிக்கிழமை

'மொழி வேலி கடந்து' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேமன்கவி தொகுத்து வெளியிட்ட 'மொழி வேலி கடந்து'... எனும் நூல் வெளியீடு நேற்று கொழும்பு, பிறைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

சுமனசிறி கொடகே, திருமதி கொடகே, டொமினிக் ஜீவா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளரும் புரவலருமான ஹாசீம் உமருக்கு கொடகே கையளித்தார். 

இந்நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளாரன  கே.பொன்னுத்துறையும் நூல் அறிமுகத்தினை திறனாய்வாளர் கே.எஸ்.சிவக்குமாரனும்  நிகழ்த்தினர்.

இதேவேளை, ருகுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க, மொழிபெயர்ப்பாளர் ஹேமச்சந்திரபதி ஜயசிங்க மற்றும் நூலசிரியர் மேமன்கவி ஆகியோர் இதன்போது உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .