2025 மே 08, வியாழக்கிழமை

'குடிமைகள்' நாவல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


'குடிமைகள்' நாவல் வெளியீட்டு விழா தேவரையாளி இந்துக் கல்லூரி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடமராட்சியைச்  சேர்ந்த மூத்த  எழுத்தாளர்  சாகித்திய ரத்தினா  தெணியான் என்பவரின் படைப்பில் 'குடிமைகள்' நாவல் உருவானது.

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற அதிபர் மா.குட்டித்தம்பி, வைத்திய கலாநிதி வே.கமலநாதன், தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் மா.நவநீதமணி, பருத்தித்துறை பிரதேச செயலர் த.ஜெயசீலன், சட்டத்தரணி தே.ரெங்கன்;, யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த.கலாமணி, கரவெட்டி பிரதேச செயலக முகாமைத்திட்ட உதவியாளர் ந.ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X