2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

கவியரங்கு

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை படர்க்கைகள் இணையம் மற்றும் கலை இலக்கிய ஒன்றியம் என்பன இணைந்து நடாத்தும் 'சமூக நேசம் எங்கள் சுவாசம்'எனும் தலைப்பிலான கவியரங்கமும் உரையரங்கமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) 4.00 மணிக்கு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

வித்தியாகீர்த்தி இறையருட் கவிஞர் ஏ.இப்றாஹீம் தலைமையில் இந்நிகழ்வு இரண்டு அங்கங்களாக நடைபெறவுள்ளது.

முதலாவது கவியரங்கநிகழ்வு சிரேஷ்ட சட்டத்தரணியும் பொதுஜன சேவா மன்றத்தின் தலைவருமான கே.எல்.அப்துல் சலீம் தலைமையிலும் இரண்டாவது உரையரங்கம் அதிபர் கவிஞர் ஏ.சீ.எம்.இஸ்மாயீல் தலைமையிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கவிதை உரைப்பதற்காக ஓய்வு பெற்ற அதிபர் கலாபூஷணம் கலைமணி ஏ.சீ.எம்.இஸ்மாலெப்பை,    கலாபூஷணம் சம்மாந்துறை ஏ.அஸீஸ், ஆசிரியை கவிதாயினி சாமஸ்ரீ மசூறா சுஹூர்தீன், கவிஞர் எஸ்.எல்.எம்.இஸ்மாயீல் மற்றும் இசைப்பாடல் ஏ.எல்.ஏ.றசூல்ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

விஷேட உரையினை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சாஹித்திய விருது பெற்றவருமான கலாபூஷணம் வாழைச்சேனை எஸ்.எல்.எம்.ஹனீபா ஆற்றவுள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X