2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலக புத்தக தின விழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.குகன்


வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் பொது நூலகத்தின் 'உலக புத்தக தின நிகழ்வுகள்' வெள்ளிக்கிழமை பொதுநூலக மண்படத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

நூல்கள், சுவடிகளைக் கொண்ட இலக்கியப் பேழைகள், முப்பரிமான நூலகம் உள்ளிட்டவற்றின் கண்காட்சியும் இதனபோது இடம்பெற்றன.

உலக புத்தக தின சிறப்பு உரையாக 2000 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட ஈழத்து நவீன கவிதை என்னும் தலைப்பில் கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலய ஆசிரியரும் எழுத்தாளருமாகிய சிதம்பரநாதன் ரமேஷ் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை நூலக சங்க உறுப்பினரும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி நூலகருமாகிய செல்வி நீலாம்பிகை நாகலிங்கம், எழுத்தாளரும் தெல்லிப்பளை  பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருமாகிய  இணுவையூர்  சிதம்பர திருச்செந்திநாதன், ஓய்வு பெற்ற அரச கணக்காளர் சின்னத்தம்பி கந்தசாமி, பிரதேச சபை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .