2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பத்தாவது காவியம் எல்லாள காவியம் வெளியீடு

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷண்

புலவர்மணி ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பத்தாவது காவியம் எல்லாள காவியம் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (4) வெள்ளவத்தை தமிழ்சங்கத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், இளைப்பாறிய பொலிஸ் அத்தியசட்கர் க. அரசரெத்தினம், அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஜனாப் ஏ.எம்.நஹியா, நாவலர் நற்பணி மன்ற ந.கருனை ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், தொடக்கவுரையை ஆ.இரகுபதி பாலஸ்ரீதரனும் ஆசியுரையை இலங்கைக் கம்பன் கழக நிறுவுனர் கம்பவாரதி இ.ஜெயராஜும் வெளியீட்டுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக முதநிலை விரிவுரiயாளர் க.இரகுபரனும் வழங்கினர்.

நூலின் விமர்சன உரையை ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தனும் ஏற்புரையை ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் வழங்கினார்.

இதன்போது பேராசிரியர் சபா ஜெயராசா ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் நூல் பிரதிகளை வெளியிட்டு வைத்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .