2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2014 ஜூலை 21 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


கொக்குவில் கிழக்கினைச் சேர்ந்த கனடாவில் வசித்து வரும் கிருபாகரன் சாந்தினி தம்பதிகளில் ஏக புதல்வியான கிருபாகரன் பிருந்தாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் வண்ணார் பண்னை இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

கோப்பாய் கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பரதநாட்டிய அரங்கேற்றத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் சி.ஜமுனாநந்தன், யாழ்ப்பாணம் இந்து நாகரீகத்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி சுகந்தினி ஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X