Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
மருதமுனை பாஹிம் ஜூவலரியின் தயாரிப்பில் உருவான கல்வியா? காதலா? திரைப்படத்தின் இறுவெட்டு வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.
கவிஞர் இக்பால் கலைக்கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு கலைக்கழகத்தின் தலைவரும் உதவி இயக்குனருமான எமம்.எம்.முகம்மது முபீன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சுகாதார இராஜங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன்அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறுவட்டை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் திதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன் போது முதல் இறுவட்டை மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர்களான உமாவரதராஜன், ஏ.சத்தார், எம்.பிர்தௌஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago