2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

'கானாமிர்தம்' இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையின் தான்தோன்றீஸ்வரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தன்தோன்றீஸ்வரத்தின் புகழ்பாடும் 'கானாமிர்தம்' இறுவட்டு வெளியீடு அண்மையில்; கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பாடல்களுக்கான இசையை தென்னிந்திய திரைப்பட பாடகரும் இசையமைப்பாளருமான ரி.எல்.மகாராஜன், வழங்கியுள்ளதுடன் ரி.எல்.மகாராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிருஷ்ணராஜ், ஸ்ரீஷா – சந்தோஸ், மகதி, மகாநிதி ஷோபனா, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

முதலைக்குடா அமரர் ஆ.சிவஞானம் அவர்களின் குடும்பத்தினரினால் இந்த இறுவெட்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் தான்தோன்றீஸ்வரர் மீதான பதிகங்களை உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தேசபந்து அருணாசலம் சிவநேசராசா, கவிக்கோ வெல்லவூர்கோபால், கலாபூசணம் சிவஸ்ரீ க.லோகநாதன்குருக்கள், இளம் கவிஞன் சோலையூரான் ஆறுமுகம் தனுஸ்கரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அடியார்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X