Princiya Dixci / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளர் எஸ்.ரி.ஸ்ரீபிருந்திரன் எழுதிய வெகுசன ஊடகவியல் - ஓர் அறிமுகம் எனும் புத்தக வெளியீடு, கொழும்பு 05, நாரஹன்பிட்டிய, கிருள வீதியிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 4.30 மணிக்கு இடம்பெறும்.
தொடக்கவுரையை ஊடகவியல் - சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.தேவகௌரி நிகழ்த்துவார். வெளியீட்டு உரையை ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரூபவதனன் நிகழ்த்துவார்.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பி.கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த புத்தக வெளியீடு விழாவில் சிறப்பு அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விழாவுக்கு கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மொழிகள் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா கலந்துகொள்வார்.
25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago