Thipaan / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகை, தனது 75ஆவது அகவையில் காலடி பதித்துள்ளமையையொட்டி அவருடைய பவள விழாவினை எதிர்வரும் 23.05.2015 அன்று சிறப்பான முறையில் மன்னாரில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த விழாவின் போது பவள விழா மலர்; வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
எனவே அந்த மலரில் இடம்பெறுவதற்கான தங்களுடைய செய்தியை வாழ்த்துரையாகவோ, கட்டுரையாகவோ, அனுபவப் பகிர்வாகவோ, கவிதையாகவோ (எந்த வடிவத்திலேனும்) அனுப்பிவைக்குமாறு பவள விழா மலர்க்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்கள் ஆக்கத்தை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் மலர்க்குழுவுக்கு அனுப்பிவைக்கும்படியும், இத்திகதிக்குப் பின்னர் வரும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், கிடைக்கப்பெறும் ஆக்கங்களை பரிசீலித்து மலரில் இடம்பெறச்செய்வதா இல்லையா என்பதை மலர்க்குழுவே தீர்மானிக்கும் என்பதையும் மலர்க்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் ஆக்கங்களை தபால் மூலமாக அனுப்புவதாயின் 'அருட்திரு. தமிழ் நேசன், மன்னார் ஆயரின் பவளவிழா மலர்க்குழுத் தலைவர், கலையருவி, 116/3, புனித சூசையப்பர் வீதி, பெற்றா, மன்னார்' என்ற முகவரிக்கும், மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாயின் nesanmnr@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 023 – 2250789, 023 – 3233276, 077 – 7429811 எனும் இலக்கங்களூடாக தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது சமயப் பணிகளோடு தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான பணிகளைக் கௌரவிக்கும் வகையில் மன்னார் மக்கள் சார்பாக இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பவள விழா ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக 'மன்னார் ஆயரின் பவள விழா ஒருங்கிணைப்புக் குழு' என்ற பெயரில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய மக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
1 hours ago