Thipaan / 2015 மே 03 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வெளியீட்டில் லரீப் சுலைமான் எழுதிய 'இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல்' நூல் வெளியீட்டு விழா இறக்காமம் பொதுச் சந்தை வளாகத்தில் சனிக்கிழமை மாலை (02) இடம்பெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழா, இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பிரதம நம்பிக்கையாளர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.கே.அப்துல் றவூப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் சிரேஷ்ட சட்டத்தணி எஸ்.எம்.ஏ.கபூர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
'இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல்' நூலின் முதல் பிரதியினை நூலசிரியர் லரீப் சுலைமான் பிரதம அதிதியிடம் வழங்கி வைத்தார்.
இரண்டாம், மூன்றாம் பிரதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் ஏனைய பிரதிகளை இந்த நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


13 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
1 hours ago