Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
பாரம்பரிய பண்பாடுகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதுதான் கூத்து கலை. இக்கலையை மருவிப்போகாது மேலும் வளர்ச்சி பெற செய்ய கலைஞர்கள் முன்நின்று உழைக்க வேண்டும் என கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.
மண்டூர் கலை இலக்கிய அவையின் இலக்கிய வழி சமூக அசைவியக்கத்திற்கான மாற்று அவுறி-11 என்ற நிகழ்வு, இலக்கிய அவையின் தலைவர் எஸ்.புஸ்பானந்தன் தலைமையில், இராமக்கிருஷ்ண மிஷன் கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்,
கூத்து காலை என்பது எங்களுடைய ஒரு பாரம்பரியமான கலை. கிராமப் புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களுக்கும் கொழும்பு போன்ற பெரு நகரங்களுக்கும் மிக மிக அவசியமான ஒரு கலைவடிவமாகும். ஆனால், அது இன்று மருவிப்போகும் நிலையில் உள்ளது.
கூத்துக்களமானது எமது மக்களிடையே ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகமாக இயங்கி வந்திருந்ததாகவும் சமூக பண்பாட்டு அறிவித்தல் என்பது ஒரு எழுதின் ஊடாகவோ பேச்சினூடாகவோ மட்டும் பரவலாக்கப்படுவதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக அல்லது ஒழுங்குபடுத்தல் ஊடாகவும் எமது பங்குப்பற்றுதல் ஊடாகவும் அந்த விடையங்களை அறிந்து கொள்பவர்களாக இருக்கின்றோம்
கூத்து கலைப்பற்றிய விடையங்களை அறிந்து கொள்வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் நாங்கள் இந்த கூத்துக்கலையை முன்னேடுக்கி கொண்டு செல்ல முடியாதவர்களாக இருக்கின்றோம். இக்கலை தேவையா இல்லையா என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.
இன்றைய இளைய சமூகத்தினர் கூத்துக்கலையை தெரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று நாங்கள் யோசிக்கவேண்டி இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமரர் காசுபதி அண்ணாவியர் அவரது நெறியாள்கையில் அரங்கேறிய தருமபுத்திர நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
36 minute ago
1 hours ago