Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகத் திரைப்பட வரலாற்றில், ஈரானியத் திரைப்படங்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. ஒரு காலத்தில் இலங்கைச் சூழலுக்கு மிகவும் அரிதாகவே ஈரானியத் திரைப்படங்கள் பார்வைக்குக் கிடைத்தன. ஆனால், அத்திரைப்படங்கள் மீதிருந்த, இலங்கை ரசிகர்களின் ஆவலை, இலங்கைக்கான ஈரானியக் கலாசார மையம், இன்று ஓரளவுக்குத் பூர்த்தி செய்து வருகின்றது.
ஈரானின் மிகச் சிறந்த இயக்குநர்களால் இயக்கப்பட்டு, வெற்றிபெற்ற பல்வேறு திரைப்படங்களை, ஈரானிய கலாசார மையம் அண்மைக் காலமாகத் திரையிட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் பஹ்ரான் தவக்கொலி இயக்கிய ‘ஹியர் வித்அவுட் மீ’ என்ற திரைப்படம், நாளை (26) மாலை 05.30மணிக்கு, இல 303 பௌத்தலோக மாவத்தை கொழும்பு – 07இல் அமைந்துள்ள இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இதேவேளை, வெற்றிகரமான ஈரானியத் திரைப்படத் திருவிழாவினை, கடந்த மாதம் கலாசார மையம் நடாத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஒரு திரைப்படம் இலவசமாகத் திரையிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
1 hours ago