Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் திங்கட்கிழமை (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த குடும்பஸ்தர் காயன்குடா வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த போது மழை பெய்யாத சமயம் திடீரென ஏற்பட்ட இடிமின்னலில் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல் கூறு பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேரின்பராஜா சபேஷ்
6 minute ago
42 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
42 minute ago
3 hours ago
4 hours ago