Mayu / 2024 ஜனவரி 14 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் உடல் இன்று சனிக்கிழமை (13) வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நல்லடக்கத்தின்போது, மரணமடைந்த ஆதிக் வளர்த்த பூனையும் கலந்து கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனை தேடி அழுதவாறு திரிந்த பூனை அவரது உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லும்போது அழுது புரண்டுள்ளது.
அதனை அவதானித்த அதீகின் உறவினர்கள் பூனையை ஆறுதல்படுத்த நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .