2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக நியமனம்

Freelancer   / 2023 ஜனவரி 03 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவையாற்றிய  கிருஷ்ணபிள்ளை தயாபரன், சேவைத் திறன் அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவை  உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவட்ட செயலகத்தில் 30 வருடகாலமாக, 10 அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.  தனது சேவைக்காலத்தில் பேராதனை பல்கலைகழகத்தின் இளமாணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமாணி, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் அலுவலக முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 

தனது முதலாவது நியமனத்தை 1991.03.18ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், இலங்கை பொது எழுதுவினைஞராகப் (தரம்  ii ஆ)  பெற்றிருந்தார். 2002.06.19ஆம் திகதி வரை பொது எழுதுவினைஞராகவும், 23.12.2022 வரையான காலப்பகுதியில் நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரா தரத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X