Janu / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டு. கரடியனாறு பகுதியில் கடையொன்றுக்கு அனுமதி பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார்
குறித்த கடை உரிமையாளர் இது தொடர்பாக கொழும்பிலுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் செவ்வாய்க்கிழமை (29) அன்று பகல் கரடியனாறு பகுதியில் குறித்த அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு, பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடமிருந்து இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை பெற்று கொண்ட நிலையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனகராசா சரவணன்
33 minute ago
40 minute ago
49 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
49 minute ago
50 minute ago