Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 நவம்பர் 08 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஒரு நாடு இரு தேசங்கள் இலக்கினை அடைய அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒருமித்து வாக்களிக்காவிட்டால் அரசியல் அநாதைகளாக்கப்படுவர் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான புஷ்பராஜ் துசானந்தன், வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு காளி கோவில் வீதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த தேர்தலில் எமது கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு நிச்சயமாக இருக்கின்றது. எமது கட்சி வடக்கு, கிழக்கு உரிமைக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றது. எமது தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் தமிழ் தேசிய இருப்புக்கு நேர்மையாக குரல் கொடுத்து வருகின்றார்கள். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியை எவ்வாறு மக்கள் உருவாக்கினார்களோ அதே போன்று இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் புதிய மாற்றங்களை மக்கள் விரும்ப வேண்டும் என்றார்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தமிழர்களின் பெரும்பான்மை சக்தியாக கொண்ட தலைமைத்துவமாக அங்கீகரிக்க ஒரு வாய்ப்பை தருவார்கள் என்று நம்புகின்றேன். அதற்கு எமது அம்பாறை மாவட்ட மக்களும் ஒரு பங்குதாரர்களாக இருப்பார்கள். எங்கள் மாவட்டத்தின் தமிழர்களின் இருப்புகளை தக்க வைக்க வேண்டுமாயின் நிச்சயமாக மக்கள் அனைவரும் ஒரே தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் .
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த காலங்களில் மக்கள் ஒரே தரப்புக்கு மாத்திரம் வாக்களித்து வந்தீர்கள், ஆனால் மக்களின் இருப்பிலோ அல்லது வாழ்க்கையிலே எந்த விதமும் மாற்றமும் நடைபெறவில்லை. குறிப்பாக நமது கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை அரசியல் மேடைகளுக்காக கடந்த 15 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஒரு கணக்காளரை கூட அச்செயலகத்திற்கு நியமிக்க வக்கில்லாத ஒரு தரப்பினராக கடந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளை அவர்கள் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறான போலி தேசியவாதிகள் எமது உரிமைகளுடன் விளையாடுகின்றவர்கள் இந்த முறை நிராகரித்து ஒரு மாற்றத்தை நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago