Janu / 2024 மார்ச் 31 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது பிரதேசங்களிலுள்ள உணவகங்களில் சனிக்கிழமை (30) திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. சஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் தலைமையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
உணவகங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்குப் பொருத்தமில்லாதவாறு உணவுகளைக் குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதனை அழிக்கப்பட்டுள்ளது.
நூருல் ஹுதா உமர்
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago