Janu / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த ஒருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கல்முனைக்குடி 02 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 790 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்த போதைப்பொருளுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

37 minute ago
46 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
55 minute ago
1 hours ago