Editorial / 2026 மே 01 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி நகரில் இன்று ஏற்பட்ட விபத்தினால் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவலப்பிட்டி - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையம் ஒன்றுக்கு அரிசி மூடைகளை ஏற்றி வந்த கொள்கலன் (Container) லொறியில், அதன் நடத்துநர் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையிலிருந்து வந்த குறித்த லொறியை, பின்னோக்கி எடுப்பதற்காகச் சாரதிக்குச் சமிக்ஞை காட்டிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது லொறியின் பின் சக்கரம் நடத்துநரின் கழுத்துப் பகுதியில் ஏறியதில், உடல் சிதைவடைந்து அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. அவர் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01) காலை 11:45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
6 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
1 hours ago