Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர். எம். றிபாஸ்
அண்மையில் ஏற்பட்ட புறவி சூறாவளித் தாக்கம் காரணமாக குறித்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டு இரண்டு தினங்களில் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் படகு கவிழ்ந்து உயிரிழந்த திருகோணமலையைச் சேர்ந்த எதிரவீர ஜயசூரிய ஆருகட்டு பட்டபந்திகே ஜானக என்னும் 45 வயதுடைய நபரது குடும்பத்தவருக்கு அரசினால் 1 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோராளவினால் இப்பணம் நேற்றைய தினம் (25) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டபிள்யு.ஏ.ஆர்.சேனாரத்ன உட்பட பயனாளி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025