2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஓட்டமாவடி நபர் கம்போடியாவில் மரணம்

Janu   / 2024 ஜூலை 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நிமித்தம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து கம்போடியா சென்ற, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த நபரொருவர் அந் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது .

மரணமடைந்த நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவரும் ஓட்டமாவடி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மௌலவி எம்.எம்.அயூப்கான் என்பவராவார்.

குறித்த நபர் வரது அறையில் இருந்த நிலையிலேயே மரணமடைந்து சடலமாக மீட்கப்பட்டதாக கம்போடியா நாட்டிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக மரணமடைந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபரின் ஜனாஸாவை கம்போடியா நாட்டில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X