R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் வியாழக்கிழமை(7) அன்று இடம்பெற்றுள்ளது.
வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த காவத்தமுனையை பிறப்பிடமாகவும், பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அசனார் முஹம்மட் நிப்றாஸ் என்பர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026