R.Tharaniya / 2025 மார்ச் 30 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் ஒன்று கூடுகின்ற பல முக்கிய இடங்கள் பிரகாசமிக்க மின்விளக்குகளால் ஒளியூட்ட பட்டுள்ளன.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தருகின்ற பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலும் கல்முனை மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்தார்.
இதன் பிரகாரம் விஷேடமாக ஒரு தொகுதி பிரகாச மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்று கூடுகின்ற பகுதிகளில் துரிதமாக பொருத்தப்பட்டு, ஒளியூட்ட பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்கரை வீதியில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் தெரு விளக்குகளுக்கு மேலதிகமாக கடற்கரைப் பகுதிகளை நோக்கியதாக இந்த புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்லம் எஸ்.மெளலானா







18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago