Janu / 2024 மே 23 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் , கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை (20) சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற வட்டாரம் - 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன் ஆகிய இருவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் , சல்லி பிரதேச மீனவர்கள் சிலர் காணாமல் போன இருவரை தேடி கடலுக்கு சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர் .
ஏ. எம். கீத்


47 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
19 Nov 2025