Janu / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (20) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய முஹம்மது லெப்பை முபாரக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (20) மாலை 5 மணி அளவில் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி வெளியே சென்றுள்ளதுடன் இரவு 7 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

12 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
50 minute ago