Janu / 2025 ஜூலை 14 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு பிரதேச மக்களின் வளர்ச்சி அந்த மக்களுடைய வரலாற்றை எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதில் தங்கி உள்ளது. அந்த வகையில் 'கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்' என்ற நூல் இப்பிராந்திய மக்களின் வரலாற்று பொக்கிஷமாக அப் பணியை நிறைவேற்றும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.ஏ நாசர் தெரிவித்தார்.
மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்ற போது அதில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியிலும் மாற்றத்திலும் கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு கிராமத்தின் வரலாற்றை நோக்கும்போது அங்கு கல்வி எவ்வாறு பரவியது,அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ற விடயங்கள் முக்கியமாக நோக்கப்படுகின்றது. கல்வி வளர்ச்சி அப்பகுதி மக்களின் வாழ்வியலின் ஒவ்வொரு பகுதியிலும் தாக்கம் செலுத்துகின்றது.
ஒரு சமூகத்தின்,பிரதேசத்தில் வரலாற்றை எழுதுவது ஒரு சாதாரண காரியம் அல்ல.மிகப் பெரும் பொறுப்புள்ள பணியாகும்.அந்த வகையில், இன்று வெளியிடப்படும் இந்த வரலாற்று நூல்,நமது பிராந்தியத்த்pன் அடையாளமாக,தொன்மையை கூறும் பொக்கிஷமாக,கலாச்சாரத்தின் பிரதிநிதியாக, பூர்விகத்தின் குரலாக அமைகிறது.
இது வெறுமனே பக்கங்களால் ஆன ஒரு புத்தகம் அல்ல காலத்தின் நினைவுகளால் ஆன ஓர் ஒப்பற்ற ஆவணமாகும்.நமது வீரர்களின் தியாகம்,நமது பண்பாட்டின் வளர்ச்சி, சமூகத்தின் மரபுகள், விழாக்கள், பழக்கவழக்கங்கள், அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் மூழ்கியுள்ள இளம் தலைமுறையினர் ஒரு பொக்கிஷமாக கருதி,இதை வாசித்து,நமது பிராந்தியத்தின் மீது அன்பு வளர்க்க வேண்டும்” என்றார்.


2 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 hours ago
8 hours ago