2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கல்முனையில் சக்தி தையல் ஆடை தொழிலகம்

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்ராஹிம் 

கல்முனை, பாண்டிருப்பில் வசித்த   புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2 இல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய கட்டடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம், சமய நிகழ்வுடன்  திறந்து வைக்கப்பட்டது. 

சக்தி ஆடைத் தொழிலகத்தின் இணைப்புச் செயலாளர் சீ. ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசய ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத்தொழிலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், விசேட அதிதியாக சுவிற்சர்லாந்தின் புலம்பெயர் உறவுகளின் பிரதிநிதியும், இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியவர்களின் ஒருங்கிணைப்பாளருமான இ. விஜயகுமாரன் உட்பட மாதர் சங்கத்தினரும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X