2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

Janu   / 2024 மார்ச் 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கிராமத்திற்கான சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வழியுறுத்தி மூதூர் - சீதனவெளி கிராம மக்கள் திங்கட்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,  மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்துள்ளனர் .

அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத் கோசங்களை எழுப்பியிருந்தனர்.அதன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து பேசியதோடு மகஜரும் கையளித்துள்ளனர்.

இது விடயத்தில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.

 தீஷான் அஹமட் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .