Freelancer / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக கால்வாய்க்குள் வீழ்ந்து உயிருக்கு போராடிய காட்டு யானை இன்று (26) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நீர் அருந்துவதற்காக கால்வாய்க்குள் வீழ்ந்த காட்டு யானையை வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு காயமுற்று நடக்க முடியாமல் இருந்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (23) அதிகாலை வேளையில் காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்ததாகவும், காலில் காயமேற்பட்டு நடக்க முடியாத நிலையில் இக்காட்டு யானை சிலநாட்கள் நடமாடி வந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .