R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவாகிய நகரமுதல்வர், பிரதிநகரமுதல்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் , மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், சுயேட்சை குழு உறுப்பினர் ஆகியோருக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் கட்சியின் தலைவர் கட்சி ஆதரவாளர்களால் கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்வை யொட்டி அதிதிகள் தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி நகரசபைஉறுப்பினர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளா் எம்.எஸ்.உதுமா லெப்பை,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் ஆகியோர் அதிதிகளாக இந்த நிலையில் கலந்துகொண்டிருந்தனர்.



எம் எஸ் எம் நூர்தீன்
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago