2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சந்தை வியாபாரிகளின் பிரச்சனை குறித்து கலந்துரையாடல்

Janu   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிரதான மரக்கறி வியாபாரிகளின் சந்தையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக திங்கட்கிழமை (22) அன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தற்போதைய நிலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. 

அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவது மற்றும் நீண்ட கால தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் சந்தை அபிவிருத்தி மற்றும் அதற்காக எதிர் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா (சுப்ரா)அவர்கள், முதலமைச்சின்  செயலாளர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் மரக்கறி வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X