Janu / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு பல்கைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றாமல் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த அதன் உரிமையாளருக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றினால் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிற்றுண்டிச்சாலை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.எம்.நெசாட் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதர்கள் குழு பரிசோதனை மேற்கொண்டு மூன்று தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருத்த வழிமுறைகள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றை பின்பற்றாத காரணத்தால், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ் வழக்கு விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதபதி ரி. கருணாகரன் முன்னிலையில் திங்கட்கிழமை (10) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், உணவு கையாழும் நிலையங்கள், பேக்கரிகள், போன்றவை பொதுச் சுகாதார பரிசோதர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago