Janu / 2025 நவம்பர் 25 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் ஏற்பட்ட கடும் சுழல் காற்றினால் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று திங்கட்கிழமை (24)மாலை சேதமாக்கப்பட்டுள்ளன.
குச்சவெளி அந்நூரியா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இக்ரா தனியார் கல்வி நிலையம் மற்றும் வீடும் இதன் போது சேதமாக்கப்பட்டன.
இதில் குறித்த வீட்டின் கூரைகள் காற்றினால் வீசப்பட்டதோடுட உபகரணங்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறித்த வீட்டு உரிமையாளரின் மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை காயமடைந்துள்ளதாகவும் ஏனைய இருவரையும் அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்ததாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டு தளபாடங்கள் மின்சார உபகரணங்கள் சேதமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிதவருகிறது.
ஹஸ்பர்.

8 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
14 Jan 2026