Janu / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதன் சோகத்தில் உட்கார்ந்து இருப்பதைப் போன்று மேசை விளக்கு (மின் லாம்ப்) ஒன்றை ஓட்டமாவடியில் வசிக்கும் ஓவியர் அபூபக்கர் முகம்மது சமீம் தயாரித்துள்ளார்.
கலைத்துறையில் பல சாதனைகளை படைத்து வரும் இவர் தற்போது சாதாரண பைப் லைன் பொருட்களைக்கொண்டு குறித்த மின் லாம்ப்பை வடிவமைத்துள்ளார்.
இந்த லாம்ப் பார்ப்பதற்கு மனிதன் கவலையுடன் உக்கார்ந்து இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.
இதனை அவர் உருவாக்க சுமார் 2 மணித்தியாளங்கள் எடுத்துள்ளன. அதன் உயரம் 1 1/2 அடியும், நீளம் அரை அடியும் கொண்டுள்ளது.
இம் மேசை லாம்பானது கருப்பு, சில்வர் நிறங்களால் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை உருவாக்க உறுதுணையாக இருந்து ஒத்தாசை வழங்கிய பானு இத்ரீஸ், பிலால் ஆகியோருக்கும் இவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதே போன்று வேறு வடிவங்களையும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எச்.எம்.எம்.பர்ஸான்


18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago